இந்தியப் பிரதமர் தமது இலங்கை விஜயத்தின் போது மீனவர் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயவில்லை எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றில் இன்று கருத்துரைத்த அவர், மீனவர் பிரச்சினையில் இந்திய மத்திய அரசாங்கம் அசமந்த போக்கைப் பின்பற்றுவதாகக் குறிப்பிட்டார்.
அதேநேரம், கச்சத்தீவு விடயம் தொடர்பிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கவனத்திற் கொள்ளாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.




