128 வருடங்களுக்குப் பின்னர் ஒலிம்பிக்கில் இணைத்துக் கொள்ளப்படவுள்ள கிரிக்கெட்

Date:

கடந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற நிலையில், 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது.

2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் போட்டியும் இடம் பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் 6 அணிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள் ) பங்கேற்கும் எனப் போட்டியின் அமைப்பாளர்கள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆண்கள் அணியில் ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் வீதம் 90 வீரர்கள் குறித்த போட்டியில் பங்கேற்பார்கள்.

பெண்கள் அணியிலும் அதே அடிப்படையில் வீரர்கள் பங்கேற்பார்கள்.

அதன்படி இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே, மற்றும் அயர்லாந்து ஆகிய 12 நாடுகளில், தகுதி சுற்று மூலம் 6 அணிகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

128 வருடங்களுக்கு பின்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டிகள் இணைத்துக்கெள்ளப்படவுள்ளன.

1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இறுதியாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....