தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
22 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்குமாறு இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று அவர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




