பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க CIDயில் முறைப்பாடு

Date:

நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.

தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள் மற்றும் தவறான செய்தி தொடர்பிலேயே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

அந்த செய்தியில் அமைச்சர் தனது மகளின் பிறந்த நாளை முன்னணி உணவகம் ஒன்றில் கொண்டாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புகைப்படங்களில் காணப்படும் பிறந்த நாள் கொண்டாட்டம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி கிரிஉல்ல பகுதியில் நடைபெற்றது எனப் பிரதி அமைச்சர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பான விடயங்களே தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....