மன்னாரில் துறைமுகத்தையும் இந்தியாவுக்குப் பாலத்தையும் அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கினால், இந்தியாவுடன் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தங்களது தரப்பு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மன்னாரில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதனை ஜனாதிபதி சவாலாக ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
வட, கிழக்கு மாகாணங்கள் இந்தியாவுடன் இணைப்பை ஏற்படுத்துவதைத் தேசிய மக்கள் சக்திக்குள் இருக்கும் ஜேவிபி ஒருபோதும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.




