உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த மாதம் 20 ஆம் திகதியிலிருந்து நேற்றுவரை 3,053 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகளும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 2,831 முறைப்பாடுகளும் வேறு சம்பவங்கள் தொடர்பில் 189 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன
அத்துடன், கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 210 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் 03 வன்முறைச் சம்பவங்களும், சட்டத்தினை மீறியமை தொடர்பில் 199 முறைப்பாடுகளும் வேறு சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்ற 3,053 முறைப்பாடுகளில் 2,491 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 562 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.




