த.வெ.க., ஆட்சியில் ஊழல், குற்றவாளிகளுக்கு இடமில்லை!

Date:

” நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும். ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள்”, என கோவையில் நடந்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.

த.வெ.க., கட்சியில் அமைத்துள்ள ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு, கோவையில் நேற்று துவங்கியது. கடைசி நாளான இன்றும் கருத்தரங்கு நடந்தது.

நேற்று பேசும் போது இந்த கருத்தரங்கம் வந்து வெறும் ஓட்டுக்காக நடத்தும் கருத்தரங்கம் இல்லை என்று சொன்னேன். த.வெ.க., வெறும் அரசியல் ஆதாயத்திற்காக துவங்கப்பட்ட ஒரு கட்சி கிடையாது. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதனால், மக்களுக்கு நல்லது நடக்கிறது என்றால், எந்த அளவுக்கும் சென்று அதை செய்ய தயங்க மாட்டோம்.

நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும்.ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள். அதனால் எந்தவித தயக்கமும் இல்லாமல், தைரியமாக நம்முடைய ஓட்டுச்சாவடி முகவர்கள் மக்களை அணுக வேண்டும்.

மக்களிடம் செல்

மக்களிடம் இருந்து கற்றுக்கொள்

மக்களுடன் வாழ்

மக்களுடன் சேர்ந்து திட்டமிடு

மக்களை நேசி

மக்களுக்காக சேவை செய்ய என அண்ணாதுரை கூறியுள்ளார். இதை நீங்கள் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால், சிறுவாணி தண்ணீர் போன்று சுத்தமான ஆட்சியாக அமையும். இன்னும் வலிமையாக சொல்ல வேண்டும என்றால், தவெக ஆட்சி ஒரு தெளிவான ஒரு உண்மையான ஒரு வெளிப்படையன நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும்.அதனால், இதை நாம் சார்பாக மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டுப்போடும் மக்களுக்கு உதவியாக இருக்க வேண்டியது நமது கடமை. குடும்பம் குடும்பமாக கோவிலுக்கு செல்வதை போல், குடும்பம் குடும்பமாக பண்டிகை கொண்டாடுவதை போல், குடும்பம் குடும்பமாக வந்து நமக்கு ஓட்டு பேடும் மக்கள் அதனை கொண்டாட்டமாக செய்ய வேண்டும்.

அந்த மனநிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போது த.வெ.க., வெறும் சாதாரண ஒரு அரசியல் கட்சி அல்ல. புரட்சிகரமான பேரணி என்பது புரியும். இந்த வெற்றியை நாம் அடைவதற்கு உங்கள் செயல்பாடு தான் மிக மிக முக்கியம். நீங்கள்தான் முதுகெலும்பு அதனை மனதில் வைத்து செயல்படுங்கள். இவ்வாறு விஜய் பேசினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....