பல்கலைக்கழக மாணவன் மரணம் – பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம்

Date:

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு பகிடிவதையே காரணமென தெரிவித்து, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவர் சமனலவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட முறைப்பாடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, இந்த மாணவரின் தற்கொலைக்குக் காரணம் பகிடிவதையா? என்பது தொடர்பில் கண்டறிவதற்காக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

பகிடிவதை என்பது குற்றவியல் குற்றம் என்பதால், யாரேனும் பகிடிவதையில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....