இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கான விசேட அறிவிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் தற்போது செயல்படவில்லை என்று இஸ்ரேலில் உள்ள மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழு (PIBA) தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலிய வேலைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடுபவர்களுக்கும், இஸ்ரேலில் வேலைகளுக்கு இலங்கையர்களை பரிந்துரைப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேலில் பணிபுரியும் மற்றும் வேலைக்கு இஸ்ரேலுக்குத் திரும்பத் திட்டமிடும் இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

1985 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின் பிரிவு 39 (1) (அ) சரத்தின்படி, வேலை வாய்ப்பு பணியகத்தால் மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலிய வேலைவாய்ப்பிற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படாது என்றும், அந்த நாட்டின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு ஆணைக்குழுவின் (PIBA) அறிவிப்பின் பேரில் எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....