ஈரானிய ஆண்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியை இஸ்ரேல் கொலை செய்யத் தேடிவருவது தொடர்பான பல செய்திகள், வாதப் பிரதிவாதங்கள், இஸ்ரேல் மற்றும் மேற்குல ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
அயத்துல்லா அலி கமேனிதான் இஸ்ரேலின் அடுத்த இலக்கு என்று சில ஆய்வாளர்களும், அலி கமேனியைக் கொல்லக்கூடாது என்று சில நாடுகளின் தலைவர்களும் கூறிவருவதான செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன.
இதேவேளை, அலி கமேனியைக்க் கொல்வதற்கான அனுமதியை ட்ரம் வழங்கவில்லை என்று சில அமெரிக்கா ஊடகங்களும், தேவை ஏற்பட்டால் அலி கமேனி மீது தாம் தாக்குதல் நடாத்துவோம் என்று பொருள்பட இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதனியாகுவும் கூறிவருவதான செய்திகள் தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளிவந்து இந்த யுத்தம் சார்ந்த பிரதான பேசுபொருளாகி வருகின்றன.




