கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் பூஜை புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

Date:

காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை பட்டாளத்தை கொண்டுள்ளவர் நடிர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மெய்யழகன்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘சர்தார் 2’ படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இதனிடையே, ‘டாணாக்காரன்’ பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது கார்த்தியின் 29-வது படமாகும். இப்படத்திற்கு ‘மார்ஷல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக நிவின் பாலியும், கேமியோ ரோலில் நடிகர் நானியும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ‘மார்ஷல்’ திரைப்படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....