
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் வழக்கில், மேலதிக சாட்சி விசாரணை 2025 ஆகஸ்ட் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று (ஜூலை 16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்டது. ஆனால், இன்று சாட்சியமளிக்கத் திட்டமிடப்பட்டிருந்த முக்கிய சாட்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து, முறைப்பாட்டு தரப்பு சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மாலி கருணாநாயக்க மேலதிக அவகாசம் கோர, நீதிபதி அந்த கோரிக்கையை ஏற்று விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்த வழக்கில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் கீழ் 27 குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. பிரதிவாதிகள் மூவரும் 2006ஆம் ஆண்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்த முற்பட்டதாகக் கூறப்படுகிறது.





