Home ஆரோக்கியம் நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்!

தலவாக்கலை பகுதியில் உள்ள ஒரு தமிழ் பாடசாலையில் தரம் 6 மாணவர்கள் மூவருக்கு, நச்சுத்தன்மை கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அவர்கள் தலைசுற்றல், வாந்தி, குமட்டல், சுவாச சிரமம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டு, லிந்துலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாசனை திரவியத்தை மாணவர்களில் ஒருவர் பாடசாலைக்கு கொண்டு வந்து மற்றவர்களுக்கும் பூசியதே காரணம் என தெரியவந்துள்ளது.
மாணவர்களின் தற்பொழுது உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.