பல்வேறு கொலை சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது

Date:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொலை சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – பக்கிஎல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, சீதுவை, ராகமை, ஹோமாகம, கல்கிஸ்ஸ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற தொடர் கொலைகளுடன் சந்தேகநபருக்கு தொடர்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் இராணுவ சிப்பாயான அவர், 8க்கும் மேற்பட்ட கொலைகளைச் செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தநிலையில் சந்தேகநபரிடம் இருந்து 2 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளும், 4 போலி அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒரு தொகை ஐஸ் ரக போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வெவ்வேறு பெயர்களினாலான தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....