ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இன்று (ஜூலை 17) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹியின் தகவலின்படி, கட்டிடத்தின் பெரும் பகுதி தீக்கிரையாகியுள்ளதுடன், புகை மூட்டம் நிறைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வலம் வருகின்றன.

தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆரம்ப விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், 48 மணி நேரத்தில் அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.