பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணிநீக்கம்

Date:

மாத்தறை வலயத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பணியாற்றிய மூன்று அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை வலய பதில் பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்று பொலிஸ் அதிகாரிகளும் மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்திற்குச் சென்று முகாமையாளருடன் கடுமையான வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அவரது சேவைகளை இலவசமாகப் பெறவும் முயன்றுள்ளனர்.

இது தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மூன்று அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

அதன்படி, பொலிஸாரின் நன்னடத்தையை பாதிக்கும் வகையில் தனிப்பட்ட இலாபத்திற்காக பொலிஸ் பதவியைப் பயன்படுத்துதல் மற்றும் தவறான நடத்தையில் ஈடுபட்டு ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியதன் காரணமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக மேற்படி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்த அதிகாரிகள் கம்புருபிட்டிய, திஹகொட மற்றும் மாவரல பொலிஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக மாத்தறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....