அமெரிக்காவுடன் உடன்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் அனில் ஜயந்த விளக்கம் !

அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் முடிவடையாத நிலையில், விபரங்களை தற்போது வெளியிட முடியாது என தொழில் அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்தார்.

அத தெரண “Big Focus” நிகழ்ச்சியில் பேசிய அவர், இது “non disclosure exclusivity” உடன்படிக்கையின் கீழ் இருக்கின்றது என்றார்.

அமெரிக்கா, இலங்கையின் 1,161 பொருட்களுக்கு சலுகைகள் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதில் 42 விவசாயப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்கும் என்றும் தெரிவித்தார். இவர்களில் 70%-80% வரை 0% வரி சலுகை வழங்கும் வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், இறக்குமதி பொருட்கள் குறித்த வரிகள் 0%-20% வரையிலான வரம்பில் உள்ளதாகவும், சில வரிகளை குறைத்தால் அரசாங்க வருவாயில் பெரிதான பாதிப்பு இருக்காது என்றும் கூறினார்.

இந்தத் தொடர்பில் கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழு நாளை (18) அமெரிக்கா செல்லவுள்ளது.