யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும் தீர்மானம், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த அமர்வு நேற்று (ஜூலை 17) பிற்பகல், தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன், இத்தீர்மானத்தை முன்வைத்து, பிரதேச சபை நேரடியாக சட்ட நடவடிக்கைக்கு முன்வர வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பிரதேச சபையின் சார்பில் இலவசமாக சட்டபூர்வ நடவடிக்கைகளை முன்னெடுப்பார் என தவிசாளர் சுகிர்தன் உறுதி அளித்தார்.