நான் இல்லையெனில் சந்தை உச்சத்தில் இருந்திருக்காது.

Date:

நான் இல்லையென்றால், அமெரிக்க சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது, செயல் இழந்திருக்கும்’ என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட், பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவலை நீக்குவதற்கு, எனக்கு அறிவுறுத்தல்களை வழங்கியதாக, ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை ஒரு வழக்கமான பொய்யான கதையை வெளியிட்டது.

அதை யாரும் எனக்கு விளக்க வேண்டியதில்லை. சந்தைக்கு எது நல்லது, அமெரிக்காவிற்கு எது நல்லது என்பது வேறு யாரையும் விட எனக்கு நன்றாகத் தெரியும். நான் இல்லையென்றால், சந்தை இப்போது சாதனை உச்சத்தில் இருந்திருக்காது.

அது செயலிழந்திருக்கும். எனவே, உங்கள் தகவலை சரியாக வெளியிடுங்கள். மக்கள் எனக்கு விளக்கவில்லை, நான் அவர்களுக்கு விளக்குகிறேன். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.வழக்கமாக கடந்த சில தினங்களாக தன்னை பெருமையாக டிரம்ப் பேசி வருகிறார்.

அதற்கு ஒரு உதாரணம், நான் தான் பல்வேறு நாடுகளில் நிகழும் போர் மற்றும் சண்டைக்கு முடிவுரை எழுதி வருகிறேன். எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....