கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில், சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த 10,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (ஜூலை 21) அதிகாலை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா சேர்ந்த 22 வயது இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.





