கொழும்பு – கண்டி வீதியில் தித்வெல் மங்கட பகுதியில், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தும், டிப்பர் லொறியுமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி மற்றும் ஒரு பிக்கு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தங்கோவிட பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து, கண்டி நோக்கிச் சென்ற டிப்பர் லொறியுடன் மோதியதாகவும், மோதலையடுத்து பேருந்து வீதியை விட்டு விலகி கடையொன்றின் அருகே நின்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாதை ஒழுங்கை பின்பற்றாமல் பயணித்த பேருந்தே விபத்துக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




