தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படுமா! பிரதமர் விளக்கம்

Date:

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ரத்து செய்யப்படாது என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மிகவும் அழுத்தம் மிக்கது என்ற காரணத்தினால் அந்த அழுத்தங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2028ம் ஆண்டளவில் மிகவும் அதிக அழுத்தமற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு இடையில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு நிலைமையினால் புலமைப் பரிசில் பரீட்சை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு இடையில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வரலாறு பாடம் கற்பிக்கப்படும் முறைமையில் தமக்கு உடன்பாடு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் விரும்பிக் கற்கும் வகையில் வரலாறு பாடம் மாற்றியமைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை, வரலாறு பாடம் மற்றும் அழகியல் பாடங்கள் ரத்து செய்யப்படாது என அவர் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

வரலாறு திரிபுபடுத்தப்பட்டுள்ள நிலைமைகளையும் அவதானிக்க முடிவதாகத் தெரிவித்தள்ளார். பாடசாலை நேரத்தை அரை மணித்தியாலங்களினால் அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....