ஒரே நாளில் 1,241 பேர் கைது

Date:

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைகளின்போது, 254,679 மில்லிகிராம் ஐஸ் , 112,567 மில்லிகிராம் ஹெரோயின், மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சா பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், 21,132 நபர்கள், 7,922 வாகனங்கள், மற்றும் 6,545 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன.

இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை உட்பட ஐந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், நேரடியாகக் குற்றங்களில் ஈடுபட்ட 18 நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக 321 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசேட நடவடிக்கைகள் கடந்த 20 ஆம் திகதி முழு நாளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் 5,300-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை (STF), மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

2025 ஏப்ரல் 13 முதல் நாடு முழுவதும் இந்த விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....