

கொழும்பு, ஜூலை 24 – பிணையில் விடுவிக்க மறுத்து நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சீராய்வு செய்யும் நோக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனு, ஜூலை 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இம்மனு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்திரிகா கலிங்கவன்ச முன்னிலையில் அழைக்கப்பட்டபோது, மூல தீர்ப்பின் நகல் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், உத்தரவை வழங்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.
இத்துடன், பிணை மறுப்புத் தீர்ப்பின் நகலை சமர்ப்பிக்கும்படி, ராஜித சேனாரத்னவின் பிரதிநிதி ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்னக்கு அறிவுறுத்திய நீதிபதி, மனுவை 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.





