எரிபொருள் விலை குறைப்பு ; இலங்கையில் உருவாகும் புதிய திட்டம்

Date:

எரிபொருள் விலையை மேலும் குறைப்பதற்காக புதிய முறையொன்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோகஸ்தர்களின் பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, எரிபொருள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் பவுசர்களின் உதிரி பாகங்களின் விலை மற்றும் பிற பராமரிப்பு செலவுகளைக் குறைப்பதன் மூலம் செலவுகளை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

இது தொடர்பாக விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, செலவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நடவடிக்கையானது எரிபொருள் விநியோகச் சங்கிலியில் செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் பலன்கள் நுகர்வோருக்குக் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....