முதல்வர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாக தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வற்கு இன்று சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார் என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இதய சிகிச்சை டாக்டர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.
இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.




