இன்று (ஜூலை 25) காலை, 52 வயதான கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்த நபர் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புடைய ஹஷீஷ் (12.196kg) மற்றும் கொக்கேய்ன் (5.298kg) ஆகிய போதைப்பொருட்களுடன் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கனடாவிலிருந்து கட்டார் வழியாக வந்திருந்தார்.

மேலதிக விசாரணைகள் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.