

இன்று (ஜூலை 25), கொழும்பில் நடைபெற்ற ‘Hotel Show Colombo 2025’ கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் முயற்சியாக இங்கிலாந்து உள்ளிட்ட மேலும் 40 நாடுகளுக்குச் சுற்றுலாப் பயணிகளுக்கான இலவச விசா திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
🔹 இதுவரை இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 7 நாடுகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டு வந்தது.
🔹 புதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததும், மொத்தம் 47 நாடுகளுக்குச் சேர்ந்த பயணிகள் இலங்கைக்கு விசா கட்டணமின்றி வர அனுமதிக்கப்படுவார்கள்.
🔹 இது வழியாக, அரசு வருடம் தோறும் 66 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழக்கக் கூடும் என்றாலும், சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மூலம் மறைமுக வருமானம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
மேலும், மாலைதீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜூலை 28ஆம் தேதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.





