
கண்டி ஹந்தானை பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 26, 27 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் நேற்று (26) நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். பெண் சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்; மற்ற மூவரும் ஜூலை 28 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






