வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்டில் நடத்தப்பட்ட விசேட சோதனையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டில் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளனர். சோதனை நடவடிக்கையை அவசரகால பதிலளிப்பு குழுவினர் மேற்கொண்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.