
2025 ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூலை 22 அன்று போக்குவரத்து அமைச்சுக்கும் ரயில்வே திணைக்களத்திற்கும் அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை என்று சங்க தலைவர் கே.யு. கொந்தசிங்க தெரிவித்துள்ளார். ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக, உள்கட்டமைப்பு பிரச்சினைகள் குறித்து உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






