
பொரளை மயான சந்தியில் இன்று (ஜூலை 28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் சாரதி, கஞ்சா பயன்பாட்டில் இருந்தது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 7 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் அதுருகிரியையைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.
கிரேன் வாகனம், போக்குவரத்து சமிக்ஞை அருகே நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியது.
பிரேக் செயலிழப்பு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






