Home இலங்கை அகஸ்ட் 11 முதல் வேலைநிறுத்தம்: வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் – அரச வைத்தியர்கள் எச்சரிக்கை!

அகஸ்ட் 11 முதல் வேலைநிறுத்தம்: வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் – அரச வைத்தியர்கள் எச்சரிக்கை!

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கிராமப்புற மற்றும் மாவட்ட வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம் நிலவுகிறது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்தியாவசிய சுகாதார சேவைகள் வழங்குவது சவாலாக மாறியுள்ளது.

மருத்துவ துறையில் நீடித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், அகஸ்ட் 11 (திங்கள்கிழமை) காலை 8 மணி முதல் நாடளாவிய வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என சங்கம் அறிவித்துள்ளது. அவசர சிகிச்சை சேவைகள் மட்டும் தொடரும்.

அரசு துறையின் கவனயீனமே, சுகாதார சேவைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்குக் காரணம் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. உடனடி தீர்வுகள் இல்லையெனில், மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கையிடப்பட்டுள்ளது.