அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபையின் 14வது அமர்வு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (அக.6) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2018 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக இந்த சபை மீண்டும் கூடியது.

சபையின் அமர்வில், தேசிய அவசரகால செயல்பாட்டுத் திட்டம் மற்றும் அனர்த்த முகாமைத்துவத்திற்கான புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போதைய காலநிலை மாற்றம், சட்டத்தின் மீளாய்வு, நிதியமொன்றை உருவாக்கல், மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றல் தொடர்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

58 இடம்பெயர்ந்த குடும்பங்களை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறுவதாக ஊவா ஆளுநர் தெரிவித்தார். வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்கவும், சுகாதார வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான வீடுகளை அடையாளம் காணவும் ஜனாதிபதி அதிகாரிகளை உத்தரவிட்டார்.