64 ரன்ஸ்.. அவமானப்படுத்திய பயிற்சியாளரை பாராட்ட வைத்த ஹர்லீன்.. மும்பைக்கு எதிராக சாதனை

Date:

இந்தியாவில் மகளிர் ஐபிஎல் 2026 பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் ஜனவரி 15ஆம் தேதி நவி மும்பையில் நடைபெற்ற 8வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் யூபி வாரியர்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற யூபி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவரில் போராடி 161/5 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நட் ஸ்கீவர் 65 (43), அமன்ஜோத் கௌர் 38 (33), நிக்கோலா கேரி 32* (20) ரன்கள் எடுத்தார்கள். யூபி அணிக்கு அதிகபட்சமாக சீக்கா பாண்டே, தீப்தி சர்மா, சோபி எக்லெஸ்டென், ஆசா ஷோபனா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய யூபி வாரியர்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லென்னிங் தடுமாற்றமாக விளையாடி 25 (26) ரன்களில் அவுட்டானார்.

ஹர்லீன் அசத்தல்:

அவருடன் சேர்ந்து தடுமாறிய கிரண் நவ்கிரே 10 (12) ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த ஹர்லீன் தியோல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஃபோப் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாட முயற்சித்து 25 (22) ரன்கள் குவித்து பவுலிங் திரும்பினார்.

ஆனால் மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஹர்லீன் அரை சதமடித்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அவருடன் அடுத்ததாக களமிறங்கிய சோலே ட்ரையான் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27* (11) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். இறுதியில் ஹர்லீன் 12 பவுண்டரியுடன் 64* (39) ரன்கள் குவித்ததால் 18.1 ஓவரிலேயே 162/3 ரன்களை எடுத்த யூபி வாரியர்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அவமானமும் பாராட்டும்:

இப்போட்டியின் வாயிலாக நாடின் டீ கிளார்க்கை (63) முந்திய அவர் மகளிர் ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக சீசன் செய்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (64) அடித்த வீராங்கனையாக சாதனை படைத்தார்.

டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 47* (36) ரன்களை 130.56 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த ஹர்லீன் நன்றாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மெதுவாக விளையாடுவதாக கருதிய பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அவரை ரிட்டையர்ட் அவுட்டாக்கி களத்திலிருந்து வெளியேற்றி அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

ஆனால் அதற்குப்பின் 3 ஓவரில் 11 மேற்கொண்டு ரன்களை மட்டுமே எடுத்த யூபி 4 விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு வித்திட்டது. அதனால் அபிஷேக் நாயரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அந்த நிலையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்லீன் யூபி அணி நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகி விருது வென்று தம்முடைய திறமையை நிரூபித்த அவரை போட்டியின் முடிவில் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பாராட்டினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....