ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் – நிகழ்த்தப்போகும் சாதனை

Date:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தப்போகும் சாதனை :

அதனை தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது எதிர்வரும் ஜனவரி 18-ஆம் தேதி இந்தூர் நகரில் நடைபெறயிருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த இறுதிப்போட்டியில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட இருக்கும் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த சாதனை குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்தவகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :

இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 75 போட்டிகளில் விளையாடி 69 இன்னிங்ஸ்களில் 5 சதம் மற்றும் 23 அரைசதம் என 2974 ரன்களை குவித்துள்ளார்.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேலும் அவர் 26 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்களை பூர்த்தி செய்வார். அதிலும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்களை பூர்த்தி செய்த இந்திய வீரராகவும் அவர் சாதனையை நிகழ்த்துவார்.

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை 4 ஆம் இடத்தில் நிரந்தர வீரராக விளையாடி வருகிறார். அதோடு இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் திகழ்ந்து வருகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....