காயங் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
T20 உலகக் கிண்ணத் தொடரில் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
வனிந்து ஹசரங்கவிற்குப் பதிலாகத் துசான் ஹேமந்த அணியில் இணைத்துக்கொள்ளப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்கவிற்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ பரிசோதனையின் போது, அவரது காயங் குணமடையாமை கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக இம்முறை உலகக் கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்படுவதாகக் கிரிக்கெட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அணி பங்கேற்கும் அடுத்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி ஓமான் அணிக்கெதிராக கண்டி – பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.




