இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் சாதனை துளிகள்

Date:

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் அரங்கேறிய சாதனைகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாகிஸ்தான் தனது இன்னிங்சில் மொத்தம் 18 ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களையே பயன்படுத்தியது. இதன் மூலம் உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக சுழற்பந்து வீச்சாளர் வீசிய வகையில் முந்தைய சாதனை சமன் செய்யப்பட்டது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இதே மைதானத்தில் நடந்த பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா ஆட்டத்தில் 18 ஓவர்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீசியிருந்தனர்.

பாகிஸ்தானின் புதிய சுழல் வரவு உஸ்மான் தாரிக் 4 ஓவர்களில் 24 ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். அவரது ஓவரில் 2 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டது.

இந்திய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஆடியுள்ள இரு ஆட்டங்களிலும் டக்-அவுட் ஆகியுள்ளார்.

2024-ம் ஆண்டு 20 ஓவர் 5 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்றுத் தந்த கேப்டன் ரோகித் சர்மா போட்டியை பார்க்க கொழும்பு சென்றிருந்தார். ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர்களுக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கினார்.

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே. சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, இந் திய கிரிக்கெட் வாரிய -தலைவர் மிதுன் மன் ஹாஸ், துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இந்த ஆட்டத்தை நேரில் கண்டு களித்தனர்.

20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் 9-வது முறையாக மோதி அதில் பெற்ற 8-வது வெற்றியாகும். 20 ஓவர் உலகக் கோப்பையில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த அணியாக இந்தியா திகழ்கிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....