இந்தியாவுக்கு ஏமாற்றம்: போராடித் தோற்ற இந்திய வில்வித்தை வீரர்கள்

Date:

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் காம்பவுண்ட் பெண்கள் அணிகள் பிரிவின் கால் இறுதியில் ஜோதி சுரேகா வென்னம், பிரகதி.

அதிதி ஸ்வாமி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-233 என்ற புள்ளி கணக்கில் துருக்கியிடம் தோற்று வெளியேறியது. இதன் ஆண்கள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஓஜஸ் தியோ டாலே, சஹில் ஜாதவ், குஷால் தலால் ஆகியோரை கொண்ட இந்திய அணி, சீனாவுடன் மோதியது.

இரு அணிகளும் 234 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்ததால், வெற்றியை முடிவு செய்ய நடத்தப்பட்ட ‘ஷூட்-ஆப்’பில் இந்திய அணி, சீனாவிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.

இதன் தனிநபர் பிரிவில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, சஹில் ஜாதவ், குஷால் தலால், ஓஜஸ் தியோடாலே ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....