ஆறிப்போன டீயை கொடுத்ததால் திட்டிய மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்

Date:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு என்பவரது மனைவி பழனியம்மாள் (வயது 75). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் சுப்பிரமணிக்கு திருமணமாகி மனைவி கனகு (42) மற்றும் ஒரு மகனுடன் அதே ஊரில் வசித்து வருகிறார்.

கணவர் இறந்து விட்டதால், பழனியம்மாள் தனது மகனுடன் தங்கியுள்ளார். விவசாய கூலி வேலைக்கு செல்லும் சுப்பிரமணி நேற்று இரவு வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மனைவி, மகன், தாயுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட பின்னர் அனைவரும் தூங்க சென்றனர்.

இந்த நிலையில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தலைவலியால் அவதிப்பட்ட பழனியம்மாள் தனது மருமகள் கனகுவிடம் சூடாக ஒரு டீ போட்டு தருமாறு கேட்டுள்ளார். தூக்கத்தில் இருந்த கனகுவும் எழுந்து மாமியாருக்கு டீ போட்டு கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது டீ மிகவும் ஆறிப்போய் இருந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனியம்மாள் மருமகளை திட்டியுள்ளார். நள்ளிரவில் டீ போட்டு கொடுத்ததற்கு நன்றி கூறாமல் இப்படி திட்டுகிறீர்களே என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த கனகு அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாமியார் என்றும் பாராமல் சரமரியாக தாக்கினார். இதில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாள் வலியால் கூச்சல் போட்டார்.

இதைக்கேட்டு தூங்கி எழுந்த பழனியம்மாளின் மகன் சுப்பிரமணி மற்றும் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாளை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த இலுப்பூர் பொலிஸார் பழனியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கனகுவை கைது செய்தனர்.

சர்வதேச மகளிர் தினமான இன்று மாமியாரை மருமகள் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலையால், பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு...

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதப்போவது யார்?

50 ஓவர் உலகக் கோப்பையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை...

வெளியில போனவுடனே இந்த பிரச்சனை வருமோ? முதல்முறையாக பயந்த மாயா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் பெண்களுக்கு ஆபத்தானவர் என்ற...