இலங்கை நியூசிலாந்து டெஸ்ட்- முதல்நாள் ஆட்டம் நிறைவு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர நிறைவில் 6 விக்கட் இழப்புக்கு 305 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
மேலும், எஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, டெஸ்ட் அரங்கில் 7000 ஓட்டங்களைக் கடந்த இலங்கையின் மூன்றாவது வீரராகவும் அவர் இன்று பதிவானார்.