# Tags
#விளையாட்டு

டெல்லி கேபிடல்ஸ் அணியை சூறையாடிய மும்பை இந்தியன்ஸ்: 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

105 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களும் இழப்பு

இந்தியாவில் நடைபெற்று வரும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தேர்வு செய்து களமிறங்கியது.

ஆனால் மும்பை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிடல்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக லேனிங் 43 ஓட்டங்கள் குவித்து இருந்தார், பந்துவீச்சை பொறுத்தவரை மும்பை அணியில் சைகா இஷாக், ஹேலி மேத்யூஸ் மற்றும் வோங் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்கள்.

மும்பை அபார வெற்றி

மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்

இதையடுத்து 106 ஓட்டங்கள் என்ற சற்று எளிதான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.

தொடக்க ஆட்டக்காரர்களான யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹேலி மேத்யூஸ் இருவரும் அதிரடியாக ஓட்டங்களை குவித்தனர், அதிகப்பட்சமாக யாஸ்திகா பாட்டியா 41 ஓட்டங்களையும், ஹேலி மேத்யூஸ் 32 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.

இதனால் 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 109 ஓட்டங்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடந்து கொண்டிருக்கும் மகளிர் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியை மும்பை இந்தியன்ஸ் அணி பதிவு செய்துள்ளது, அத்துடன் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.