மனைவிக்கு தாய்ப்பால் கொடுக்க கற்றுக் கொடுக்கும் கணவன்: மகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட மனைவி

Date:

சீனாவில் ஆண் ஒருவர், மனைவிக்கு எப்படி சரியாக தாய்ப்பால் கொடுப்பது என்று கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தாய்ப்பால்

தென்கிழக்கு சீனாவின் புஜியான் மாகாணத்தைச் சேர்ந்த பெயர் தெரியாத தந்தை ஒருவர், மனைவி தனது ஒரு மாத குழந்தையை தவறாக பிடித்து வைத்திருப்பதை உணர்ந்து அவருக்கு எப்படி சரியாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுக்கிறார்.

அவர்களது வீட்டில் உள்ள லவுஞ்ச் நாற்காலியில் அமர்ந்து கொண்டு இருக்கும் கணவர், குழந்தையை தனது கையில் பிடித்துக் கொண்டு கற்றுக் கொடுப்பதை மகிழ்ச்சியுடன் பார்த்த மனைவி, அதை வீடியோவும் எடுத்துள்ளார்.

அதில் “குழந்தையை ஏன் எப்போதும் கடிகார திசையில் நகர்த்துகிறீர்கள்? நான் இப்போது உங்களிடம் கேட்கிறேன், ஏன் அதை நிலையாக பிடிக்கவில்லை? சிரிக்காதீர்கள்!” என்று கணவன் மனைவியிடம் பேசும் ஆடியோவும் பதிவாகி இருந்தது.

மேலும் மனைவி அதற்கு கிண்டலாக, “இது எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, ஆண் ஒரு பெண்ணுக்கு தாய்ப்பால் பற்றி கற்றுக்கொடுக்கிறார், அவரால் இதை தனியாக செய்ய முடிந்தால், இனி நான் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ வைரல்

சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இணைய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பல சீன தம்பதியினர் பெருங்களிப்புடன் இந்த வீடியோவை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....