பிறந்து 10 நாட்களேயான சிசு புகையிரதத்தில் இருந்து மீட்பு

Date:

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த பாடுமீன் புகையிரதத்தில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர்.

பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்தனர்.

பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான இளைஞன் தெஹிவளை பகுதியில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த பெண்ணிற்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டு, அவரை கொழும்பு பகுதிக்கு அழைத்து வந்து தந்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....