மது போதையில் திருமண மேடையில் மணமகன் செய்த காரியத்தினால் ; மணமகள் அதிரடி முடிவு

Date:

அசாமில் திருமண மேடையின் மேல் மது போதையில் மணமகன் படுத்து உறங்கியதால், மணமகள் திருமணத்தை அதிரடியாக தடுத்து நிறுத்தியுள்ளார்.

குடிகார மணமகன்

இந்தியாவின் அசாம் மாநிலம் நல்பார் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த திருமணம், மணமகன் செயலால் நிறுத்தப்பட்டுள்ளது.

திருமண சடங்குகள் நடைபெற்று கொண்டு இருந்த மணமேடைக்கு மணமகன் மது போதையில் வந்ததால், மணமகள் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

மணமகன் பிரசென்ஜித் ஹாலோய்-ஆல் (Prasenjit Haloi) நிலையாக உட்கார கூட முடியாமல் மணமேடையிலேயே படுத்து உறங்கியதால் மணமகளின் வீட்டார் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் முறைபாடு

இது தொடர்பாக மணமகளின் உறவினர் தெரிவித்துள்ள தகவலில், திருமணம் சிறப்பாக நடைபெற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம், ஆனால் மணமகனின் வீட்டார்கள் 95 சதவிகிதத்தினர் குடித்து இருந்தனர்.

நிலைமை தொடர்ந்து அதிகரித்ததால், மணமகள் மண மேடையில் உட்கார மறுத்துவிட்டாள், இதையடுத்து காவ்ன் புர்ஹாவை(அசாமிய கிராமத்தின் தலைவர்) தொடர்பு கொண்டு பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாப்பிள்ளையால் காரில் இருந்தே இறங்க முடியவில்லை, இதில் அவரது தந்தையும் நல்ல மது போதையில் இருந்தார் என மணமகளின் உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி நல்பாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....