# Tags
#உலகம்

98 வயதில் 500க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் ; புதிதாக பிறந்த கொள்ளுப் பேரக்குழந்தையை முதன்முறையாக சந்திக்கும் அதிர்ஷ்டசாலி பாட்டி!

அமெரிக்காவில் ஏற்கெனவே 500-க்கும்மேற்பட்ட பேரக்குழந்தைகளைக் கொண்ட ஒரு 98 வயது பெண், இப்போது புதிதாக பிறந்துள்ள தனது கொள்ளு பேத்தியை முதல் முறையாக பார்த்துள்ளார்.

98 வயது அதிர்ஷ்டசாலி பாட்டி!

பெரியோர்கள் பொதுவாக பேரன் பேத்தி பார்ப்பது அதிர்ஷடம் என்பார்கள், அனால் அமெரிக்காவின் கென்டக்கியைச் சேர்ந்த 98 வயதான ‘மேடெல்’ (MaeDell) என்று அழைக்கப்படும் கோர்டெலியா மே ஹாக்கின்ஸ் (Cordelia Mae Hawkins) என்ற பெண்ணுக்கு அந்த அதிர்ஷடம் 500 முறைகளுக்கு மேல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் அவர் புதிதாக பிறந்த மற்றோரு பேரக்குழந்தையை முதல்முறையாக பார்த்து கையில் தூக்கி கொஞ்சிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கொள்ளு-கொள்ளு-கொள்ளு-பேத்தி

98 வயதான அவரது கைகளில் பிறந்து ஏழு வாரமே ஆன ஜாவியா விட்டேக்கர் என்ற குழந்தை இருக்கிறது.

இதில் சிறப்பு என்னவென்றால், ஜாவியா தான் மேடெல்லின் முதல் உயிரியல் ஆறாம் தலைமுறை கொள்ளுப் பேத்தி (great-great-great-granddaughter) ஆவார். அதாவது அவருக்கு பிறந்தவர்களுக்கு பிறந்த பேத்தி.

மேடெலின் குடும்பம் பல ஆண்டுகளாக 6000-க்கும் மேற்பட்ட சந்ததியினரை வழங்கியுள்ளது. அவரது குடும்பம் மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறது.

#image_title

500-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்

98 வயதான மேடெல் தனது 16 வயதில், 50 வயதான முதல் கணவரை திருமணம் செய்து கொண்டார். எனவே, கணவருக்கு இருந்த 10 குழந்தைகள் மற்றும் தனக்கு பிறந்த 13 குழந்தைகள் என 23 பேருக்கு அவர் தாயானார்.

அவருக்கு இப்போது 106 பேரக்குழந்தைகள், 222 கொள்ளுப் பேரக்குழந்தைகள், 234 கொள்ளு-கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 37 கொள்ளு-கொள்ளு-கொள்ளுப் பேரப்பிள்ளைகள் அமெரிக்கா முழுவதும் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவரது வாழ்க்கையில் இதுவரை அவரது கணவர்கள் மற்றும் பிள்ளளைகள் பலரது இறப்பையும் பார்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.