போராடி தோல்வியை தலுவியது ! இலங்கை

நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைப்பெற்றது. முதல் இன்னிங்சில் இலங்கை 355 ஓட்டங்களும், நியூசிலாந்து 373 ஓட்டங்களும் எடுத்தன.
18 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 105.3 ஓவரில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இதனால் நியூசிலாந்து அணிக்கு 285 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
நேற்றைய 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 17 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 257 ஓட்டங்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டத்தை தொடங்க முடியவில்லை. சுமார் 3½ மணிக்கு நேரத்துக்கு மேல் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
மழை நின்றதும் உள்ளூர் நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. இரவு 7 மணி வரை ஆட்டம் ஒரே செஷனாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் குறைந்தபட்சம் 53 ஓவர்கள் வீசப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் டாம் லாதம், வில்லியம்சன் தொடர்ந்து விளையாடினர்.
தனது அணிக்காக வில்லியம்சன் சதம் விளாசி கடைசி பந்து வரை களத்திலிருந்து நியூசிலாந்து அணிக்கு வெற்றியினை பெற்றுக்கொடுத்தார். இவருக்கு துணையாக மிச்சல் 81 ஓட்டங்களை 86 பந்துங்களில் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பலம் கொடுத்தார்.
இலங்கை அணி சார்பாக அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுக்களை பெற்றுக்கொடுத்தார். 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற ரீதியில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.