போயா தினத்திலும் மதுபான விற்பனையா?

போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்கும் யோசனையை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்வைத்துள்ளார்.
போயா தினங்களில் வெளிநாட்டவர்களுக்கு மாத்திரம் மதுபானங்களை விற்பனை செய்யுமாறு அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போயா நாட்களில் வெளிநாட்டவர்கள் மதுபானம் வாங்குவதற்கு வழியில்லை எனவும், எனவே, மதுபான நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே முன்மொழிந்தார்.
முன்னதாக, ஏற்றுமதி மற்றும் மருத்துவ தேவைக்காக கஞ்சா பயிரிடுவதை சட்டபூர்வமாக்குமாறு டயானா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது