அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி மாயம்!

Date:

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் பாதுகாப்பு துப்பாக்கி ஒன்று காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளார்.

சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் உத்தியோகத்தர் குறித்த துப்பாக்கியை பையில் வைத்து பலாங்கொடையில் உள்ள அகில சாலிய எல்லாவலவின் இல்லத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான அறையில் வைத்து சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அவர் பணிக்கு திரும்பிய போது துப்பாக்கி கிடைக்காததால் இது தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப்பிரிவு நிலைய கட்டளைத்தளபதி பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாகிஸ்தானில் ரயில் விபத்து !

பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது, பயணிகள் ரயில் மோதியதில் நேற்று (24)...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம்...

இந்தியாவின் ரயில் இயந்திரங்கள் இலங்கைக்கு

சுமார் 20 இயந்திரங்களை இலங்கைக்கு வழங்க இந்தியா இணக்கம் வௌியிட்டுள்ளதாக ரயில்வே...

சாதனை படைத்த நாஸா (NASA)

ஆஸ்டிராய்ட் எனப்படும் சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் அமெரிக்காவின்...