இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த பங்காளதேஷ் அணி!

Date:

பங்காளதேஷிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான T20 தொடர் நடைபெற்று வருகின்றது.

இதில் முதல் மற்றும் 2வது T20 போட்டியில் பங்காளதேஷ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி T20 போட்டி இன்று நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பங்காளதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக சிறப்பாக விளையாடிய லிட்டன் தாஸ் 57 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

நஜ்முல் ஹசைன் சாண்டோ 47 ரன்கள் குவித்தார். இதனை தொடர்ந்து 159 ரன்கள் இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் 53 ரன்களும் ,ஜோஸ் பட்லர் 40 ரன்களும் எடுத்தனர். பங்காளதேஷ் சார்பில் தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியால் கடந்த ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து பங்காளதேஷ் அணி 3-0 என தொடரை கைப்பற்றியது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நின்ற கோலத்தில் காட்சி தரும் லட்சுமி நரசிம்மர்

பொதுவாக ஆலயங்களில் அருள்பாலிக்கும் நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். யோக...

விஸ்வநாதன் ஆனந்த் சாதனையை சமன் செய்த பிரக்ஞானந்தா

ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான...

காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதியில் சபலென்கா அதிர்ச்சி தோல்வியினை தழுவியுள்ளார். கிராண்ட்ஸ்லாம்...

இரண்டாவது முறையாக வென்று அசத்தியது RCB!

RCB அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. நடப்பு ஐ.பி.எல்....